இந்தியா Vs நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் நியூசி. 235 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா Vs நியூசிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் நியூசி. 235 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
x
கிறிஸ்ட்சர்ச்சில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போட்டியி​ல், முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து, முதல்நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்திருந்தது. 2ஆம் நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய அந்த அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் தடுமாறியது. முடிவில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டாம் லதாம் 52 ரன்களும், ஜெமிசன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4 விக்கெட்களும் , பும்ரா 3 விக்கெட்களும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்