3-வது நடுவர் மூலம் நோ பால் கண்டறியும் முறை - மகளிர் டி-20 உலக கோப்பை தொடரில் அமல்

ஆஸ்திரேலியாவில் வரும் 21ஆம் தேதி தொடங்கும் மகளிர் 20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 3-வது நடுவர் மூலம் நோ - பால் கண்டறியும் முறை அமல்படுத்தப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது.
3-வது நடுவர் மூலம் நோ பால் கண்டறியும் முறை - மகளிர் டி-20 உலக கோப்பை தொடரில் அமல்
x
ஆஸ்திரேலியாவில் வரும் 21ஆம் தேதி தொடங்கும், மகளிர் 20 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 3-வது நடுவர் மூலம் நோ - பால் கண்டறியும் முறை அமல்படுத்தப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. புதிய விதியின் படி, பந்து வீச்சாளர் கிரீசுக்கு வெளியே காலை வைத்து வீசினால், அதனை டி.வி. ரீப்ளே உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து, 3-வது நடுவர் தகவல் அனுப்புவார். அதன் அடிப்படையில் கள நடுவர் முடிவை அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3-வது நடுவரின் ஆலோசனையின்றி, கள நடுவர்கள் நோ பால் குறித்து சிக்னல் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்