நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - இந்திய அணி தோல்வியடைந்து, தொடரை இழந்தது
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் குப்தில் 79 ரன்களும், டெய்லர் 73 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதையடுத்து, 48 புள்ளி 3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 251 ரன்களை மட்டும் எடுத்து, தோல்வியைத் தழுவியது.
Next Story

