5 முறை என்பிஏ சாம்பியன்ஷிப் வென்ற கூடைப்பந்தாட்ட வீரர் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிராயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை பற்றிய செய்தி தொகுப்பு
5 முறை என்பிஏ சாம்பியன்ஷிப் வென்ற கூடைப்பந்தாட்ட வீரர் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில்  பலி
x
1978 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 23ஆம் தேதி பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஃபிலடெல்பியா பகுதியில் பிறந்தவர் கோப் பிரயண்ட். இவருடைய தந்தை ஜோ பிரயண்ட் முன்னாள் NBA வீரர்.
பள்ளி பருவத்தில் கூடைப்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட கூடைப்பந்து விளையாட தொடங்கியுள்ளார். தந்தையிடம்,
கூடைப்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுக்கொண்டு
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, கோப் பிரயண்ட்க்கு 
NBA சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து.
லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக பிரயண்ட் விளையாட ஆரம்பித்த போது அவருக்கு வயது 18. 

கூடைப்பந்தில் 'ஷூட்டர் கார்டு'-ஆக பிரயண்ட் விளையாடினார். 6 புள்ளி 6 அடி உயரமான கோப் பிரயண்ட் எதிரணி வீரர்களை திறம்பட ஏமாற்றி பந்தை கூடையில் வீசுவார்.

கோப் பிரயண்டை செல்லமாக பிளாக் மாம்பா என்று ரசிகர்கள் அழைப்பார்கள் அதற்கான காரணம் , மாம்பா போல் வளைந்து நெளிந்து பந்தை ஸ்டைலாக ஷூட் செய்வார்...

லாஸ் ஏஞ்சல்ஸ் அணி 5 முறை NBA சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல  முக்கிய காரணியாக இருந்தவர் கோப் பிரயண்ட். 20 ஆண்டுகால கூடைப்பந்தாட்ட பயணத்தில் பிரயண்ட், லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடினார். 2016 ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்த கோப் பிரயண்ட், அதன் பிறகு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கூடைப்பந்து பயிற்சி அளித்து வந்தார்.

இந்நிலையில் தனது மகள் விளையாடும் கூடைப்பந்தாட்ட அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஹெலிகாப்டரில் சென்ற பிரயண்ட் விபத்தில் உயிரிழந்தார்.

கோப் பிரயண்ட்-ன் மரணம் உலகளவில் கூடைபந்தாட்ட ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்