இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
x
ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததால் , நியூசிலாந்து பேட்ஸ்மன்கள் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 203 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து வீரர்கள் காலின் முன்ரோ, வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்திய அணியில் பும்ரா மட்டுமே கட்டுகோப்பாக பந்து வீசினார். 204 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய பேட்ஸ்மன்கள், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகுல், கேப்டன் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் அபாரமான ஆட்டம் இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் 19 ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்