"சென்னை ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்புகிறேன்" - ரசிகர்களிடம் தமிழில் கோரிக்கை விடுத்த ச‌ச்சின்

தனக்கு உதவிய சென்னையின் பிரபல தனியார் ஓட்டல் ஊழியரை சந்திக்க உதவுங்கள் என கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் ச‌ச்சின் தமிழில் பதிவிட்டுள்ளார்.
சென்னை ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்புகிறேன் - ரசிகர்களிடம் தமிழில் கோரிக்கை விடுத்த ச‌ச்சின்
x
தனக்கு உதவிய சென்னையின் பிரபல தனியார் ஓட்டல் ஊழியரை சந்திக்க உதவுங்கள் என கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.  இந்தியா, வெஸ்ட் இன்டீஸ் தொடரின் போது சென்னை தாஜ் கொரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய எல்போ கார்டு பற்றி கூறிய அறிவுரை மிகவும் உதவியதாக கூறியுள்ள ச‌ச்சின் அந்த நபரை சந்திக்க ஆசை படுவதாக தெரிவித்துள்ளார். அதற்கு நீங்கள் தான் உதவ வேண்டும் என்றும் ரசிகர்களிடம் ச‌ச்சின் கோரிக்கை வைத்துள்ளார். இதனை ஆங்கிலத்தில் வீடியோவாகவும் ச‌ச்சின் வெளியிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்