வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் : இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது

வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் : இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது
x
மும்பையில் நடைபெற்ற 3வது டி -20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் ரோகித், ராகுல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது. பின்னர் ராகுலுடன் சேர்ந்த கேப்டன் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.20 ஒவர் முடிவில் இந்திய அணி 240 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராகுல் 91 ரன்கள் , ரோகித் 71 ரன்கள், கோலி 70 ரன்கள் விளாசினர்.

Next Story

மேலும் செய்திகள்