இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

மும்பையில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
x
போட்டி நடைபெறும் வாங்கடே மைதானத்தில், இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இன்று நடைபெறும் போட்டி, இரவு 7 மணிக்கு துவங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. எனவே, தொடரை வெல்ல, இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால்,  போட்டி, மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்