பி.சி.சி.ஐ.யின் பிரதிநிதியாகினார் அமித்ஷா மகன் ஜெய்ஷா
ஐ.சி.சி.யின் கூட்டங்களில் இனி பி.சி.சி.ஐ.யின் பிரநிதியாக அமித்ஷாவின் மகனும், பி.சி.சி.ஐ.யின் செயலாளரான ஜெய்ஷா பங்கேற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யின் கூட்டங்களில் இனி பி.சி.சி.ஐ.யின் பிரநிதியாக அமித்ஷாவின் மகனும், பி.சி.சி.ஐ.யின் செயலாளரான ஜெய்ஷா பங்கேற்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பி.சி.சி.ஐ.யின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, லோதா குழு பரிந்துரைகளை திருத்த உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறுவது என பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஐ.சி.சி.கூட்டத்தில் பி.சி.சி.ஐ.யின் பிரதிநிதியாக ஜெய்ஷா பங்கேற்க இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.கே. பிரசாத் உள்ளிட்ட 2016ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர்களின் அனைத்து பதவிக்காலமும் நிறைவடைந்துவிட்டதாக கூறினார்.
Next Story