மீண்டும் களமிறங்குகிறார் தோனி..? ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் களமிறங்குகிறார் தோனி..? ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்
x
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்தில், ஆசிய லெவன் அணிக்கும் , உலக லெவன் அணிக்கும் இடையே 2 டி-20 போட்டிகள் நடைபெறுகிறது, இந்நிலையில் ஆசிய லெவன் அணிக்காக இந்தியா சார்பில் தோனி, கோலி உட்பட 7 வீரர்கள் விளையாட வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது, அதற்கு அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதால் தோனி தன்னை தயார்படுத்தி கொள்ள அந்த தொடரில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாகவும், அதன்பின் தனது ஒய்வு குறித்து முடிவு செய்வார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்