இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் : 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் : 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
x
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் , இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. ராஞ்சியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னில் சுருண்டது.  பாலோ ஆனுக்கு பிறகு இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அந்த அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிகிடி ,பிரையன் ஆட்டமிழக்க தென்னாப்பிரிக்கா 133 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  இதன் மூலம், மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்தது.

Next Story

மேலும் செய்திகள்