ஒலிம்பிக் தகுதிச்சுற்று வாய்ப்பு : "அனுபவ வீராங்கனை என்பதால் மேரிக்கு வாய்ப்பு வழங்குவதா?"

அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில், குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக களமிறங்க நட்சத்திர வீராங்கனை மேரி கோம் - இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஒலிம்பிக் தகுதிச்சுற்று வாய்ப்பு : அனுபவ வீராங்கனை என்பதால் மேரிக்கு வாய்ப்பு வழங்குவதா?
x
அண்மையில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில், 51 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்ற மூத்த வீராங்கனை மேரிகோம் , ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றுக்கு , நேரடியாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தேர்வு செய்துள்ளது. இதற்கு இதே எடைப்பிரிவில் விளையாடும் , இளம் வீராங்கனை நிகாத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனக்கும், மேரிகோமுக்கும் இடையே போட்டி நடத்தி அதில் வெற்றி பெறுபவரை ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு அனுப்ப வேண்டும் என இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்திடம் அவர் விடுத்துள்ள கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகாத் ஜரீனின் கோரிக்கைக்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும் தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உறுப்பினராக உள்ள அபினவ் பிந்த்ராவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து மேரி கோமிடம் கேட்ட போது , இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் முடிவுபடி தான் செயல்பட முடியும் எனவும் தகுதி போட்டி நடத்தினாலும் ஜரீனை எதிர்கொள்ள தயார் எனவும் அதிரடியாக பதிலளித்துள்ளார். அபிநவ் பிந்தராவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் நான் எவ்வளவு தங்கம் வென்றேன என அவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் இந்த விஷயம் குறித்து பேசாமல் அவர் ஒதுங்கி இருப்பது நல்லது என்றும் மேரி கோம் ஆவேசமாக பேசியுள்ளார். எது எப்படி ஆனாலும் சரி , திறமையான வீரர் அடையாளம் காணப்பட்டு ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஒருவர் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே குத்துச் சண்டை ரசிகர்களின் ஆசையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்