அக். 19 ல் 3 வது டெஸ்ட் கிரிக்கெட் துவக்கம்- இந்தியா-தெ. ஆப். அணிகள் மோதல்
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை 19 ம் தேதி துவங்குகிறது
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 - வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை 19 ம் தேதி
துவங்குகிறது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் போட்டி நடைபெறும் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். விசாகப்பட்டினம் மற்றும் புனேவில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று தொடரை இந்தியா ஏற்கனே கைப்பற்றி விட்டது. எனவே 3 - வது டெஸ்ட் போட்டியிலும் வெல்லும் முனைப்பில் இந்திய வீரர்கள் களமிறங்குகிறார்கள். அதேநேரம் இந்தியாவின் வெற்றியை தடுக்க, தென் ஆப்பிரிக்க வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள். ஆகவே, ராஞ்சி டெஸ்ட் போட்டி, விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story