லேவர் கோப்பை டென்னிஸ் : பெடரருக்கு ஆலோசனை வழங்கிய நடால்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின்,லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.
லேவர் கோப்பை டென்னிஸ் : பெடரருக்கு ஆலோசனை வழங்கிய நடால்
x
சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின்,லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். ஐரோப்பிய வீரர்களுக்கும் ,உலகின் முன்னணி வீரர்களும் மோதும் இந்த தொடரில், ஐரோப்பிய வீரர்கள் அணியில் நடால், பெடரர், அலெக்ஸாண்டரும், உலக அணியில் ரோனிக், ஜான் இஸ்னர் , நிக் கிர்ஜியோஸ் உள்ளனர், இந்நிலையில் ரோஜர் பெடரர், நிக் கிர்ஜியோஸுக்கு இடையேயான லீக் ஆட்டம், டென்னிஸ் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது காரணம் ஒரு செட்டில் பெடரர் பின்தங்க, பிரதான எதிரி என அழைக்கப்படும் நடால் பெடரருக்கு ஆலோசனை வழங்கியது, அனைவரையும் கவர்ந்தது. இதன் பின் சுதாரித்து கொண்டு விளையாடிய பெடரர் ஒரு வழியாக டை பிரேக்கரில் 10க்கு 7 என்ற கணக்கில் செட்டை வசமாக்கி வெற்றி அடைந்தார்.

Next Story

மேலும் செய்திகள்