டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் : கோலியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ரோகித் ?

நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.
டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் : கோலியின் நம்பிக்கையை காப்பாற்றுவாரா ரோகித் ?
x
நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா, இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி , ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கி கொண்டிருந்த ரோகித் சர்மாவின் மீது நம்பிக்கை வைத்து தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி அவரை ஜொலிக்க வைத்தார், தற்போது அதே யுக்தியை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் ரோகித்தை தொடக்க ஆட்டக்காராக களமிறக்க முடிவு செய்துள்ளார் கேப்டன் கோலி. உலக கோப்பை தொடரில் 5 சதங்கள் அடித்து தொடரில் 648 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ரோகித். ஆனால் அதன் பின் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டும் அவர் அணியில் இடம்பெறாதது கிரிக்கெட் வல்லுநர்களின் விமர்சனத்துக்கு உள்ளானது,

இதற்கான முக்கிய காரணம் தற்போது அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ள கே.எல்.ராகுல் கடந்த 12 இன்னிங்சில் ஒன்றில் கூட 50 ரன்களை கடக்காததால் மாற்று தொடக்க ஆட்டக்காரர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடிக்கு  உள்ளானது பிசிசிஐ. தொடக்க ஆட்டக்காரான இளம் வீரர் பிரித்வி ஷா போட்டிகளில் விளையாட தடை உள்ள நிலையில், ரோகித் சர்மாவின் மீது பிசிசியின் பார்வை திரும்பியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட உள்ளார் ரோகித் சர்மா. அவர், இதற்கு சரியான தேர்வு என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட, ஏனென்றால் அவர் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதம் விளாசி ஆயிரத்து 585 ரன்கள் குவித்துள்ளார். தோனி தன் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றிய ரோகித், கோலியின் நம்பிக்கையையும் காப்பாற்றுவார் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்