தோனி ஓய்வு செய்தி உண்மைக்கு மாறானது - தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
தோனி குறித்து விராட் கோலி, நினைவுகளை பகிரும் விதமாக சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் தோனி இன்று ஓய்வு முடிவை அறிவிக்க செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இருப்பினும், இது போன்ற சந்திப்பிற்கு தோனி ஏற்பாடு செய்யவில்லை என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. ஓய்வு குறித்து தோனி, தம்மிடம் எதுவும் சொல்லவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் எம். எஸ்.கே. பிரசாத் தெரிவித்தார். மேற்கிந்தியத் தீவுகள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் தோனி இந்திய அணியில் சேர்க்கப்படாததால், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Next Story