"பாகிஸ்தான் சென்று விளையாட விருப்பமில்லை" - 10 இலங்கை வீர‌ர்கள் விலகல்

பாகிஸ்தானில் நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து இலங்கை வீர‌ர்கள் 10 பேர் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
பாகிஸ்தான் சென்று விளையாட விருப்பமில்லை - 10 இலங்கை வீர‌ர்கள் விலகல்
x
பாகிஸ்தானில் நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து இலங்கை வீர‌ர்கள் 10 பேர் தொடரில் இருந்து விலகியுள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீர‌ர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின் இலங்கை அணி பாகிஸ்தானிற்கு சென்று விளையாடுவதை தவிர்த்து வந்த‌து. தற்போது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை அணி வரும்  27 ஆம் தேதி பாகிஸ்தானில் சென்று விளையாட உள்ளது. ஆனால் பாகிஸ்தானில் போதிய பாதுகாப்பு இருக்காது என கூறி, கேப்டன் லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்தீவ்ஸ் உள்ளிட்ட முக்கிய வீர‌ர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். பல உள்ளூர் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியுள்ள திசாரா பெரேராவும் இந்த பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்