அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : முதல் சுற்றில் ரோஜர் ஃபெடரர் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகலை வீழ்த்தி, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : முதல் சுற்றில் ரோஜர் ஃபெடரர் வெற்றி
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப்போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகலை வீழ்த்தி, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். உலகின் 190-ஆம் நிலை வீரரான சுமித் நாகல், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அனுபவ வீரர் ரோஜர் ஃபெடரருக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் சுதாரித்துக்கொண்டு ஆடிய ரோஜர் ஃபெடரர் 4-6, 6-1,6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். முன்னதாக ஆண்கள் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 4-6, 1-6, 2-6 என்ற செட் கணக்கில்,  ரஷ்ய வீரர் டேனில் மெட்வெடேவிடம் தோல்வியடைந்தார். 


Next Story

மேலும் செய்திகள்