விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு
விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அர்ஜூனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மல்யுத்த வீரர் பஜ்ரங்புனியா , பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக் இருவருக்கும் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
உடற்கட்டு போட்டிக்காக தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் , அர்ஜுனா விருதுக்காக தேர்வாகியுள்ளார். இதேபோல, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, கபடி வீரர் அஜேய் தாக்கூர், மல்யுத்த வீராங்கனை பூஜா தந்தா . கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் உள்ளிட்ட 19 பேர், அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பேட்மிட்டன் பயற்சியாளர் விமல்குமார், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சந்தீப் குப்தா, தடகள பயிற்சியாளர் மொகிந்தர் சிங் தில்லியான் ஆகியோர் துரோனாச்சார்யா விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
தயான்சந்த் விருதுக்காக, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல்கீப்பர் manuel fredrick, இந்திய டேபிள் டென்னிஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளர் அரூப் பசாக், முன்னாள் மல்யுத்த வீரர் மனோஜ்குமார், முன்னாள் வில்வித்தை வீரர் லால்ரெம்சங்கா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Next Story