டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் சுற்று : மதுரை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டி.என்.பி.எல். லீக் சுற்றில் சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது
டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் சுற்று : மதுரை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
x
நத்தத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் சிஜித் சந்திரன், அருண் கார்த்திக் ஆகியோர் தலா 39 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் மதுரை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சசிதேவ் அதிகபட்சமாக 51 ரன்களும், கோபிநாத் 45 ரன்களும் எடுக்க, 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மதுரை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் : திண்டுக்கல் டிராகன்ஸ் 5வது வெற்றி
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 178 ரன்கள் எடுத்தது,. திருச்சி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 99 ரன்களும், கே.முகுந்த் 43 ரன்களும்  சேர்த்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 5 பந்துகள் மீதம் வைத்து 179 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சதம் விளாசிய ஜெகதீசன் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்

Next Story

மேலும் செய்திகள்