ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் மோதல் இல்லை - விராட் கோலி
தனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
தனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றதற்கு அணிக்குள் ரோகித் சர்மாவுக்கும்,விராட் கோலிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என தகவல் பரவியது.தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட அமெரிக்கா புறப்பட்டது,இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த கோலி,தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்திருந்தால் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது எனவும்,இது போன்ற வதந்திகளால் யார் பயன் அடைய போகிறார்கள் என புரியவில்லை எனவும் கூறினார்.
Next Story