இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா

உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.
இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா
x
இறுதி போட்டியில், 49வது ஓவரின்  4வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் எடுக்க ஓடிய போது, பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றதால் மொத்தம் ஆறு ரன்கள் வழங்கினார் நடுவர் தர்மசேனா. ஆனால் விதிப்படி 5 ரன்கள் மட்டுமே வழங்க வேண்டும் என பல நடுவர்கள் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் இது குறித்து நடுவர் தர்மசேனா அளித்துள்ள பேட்டியில் போட்டிக்கு பின்பு ரீப்ளேயில் பார்க்கும் போது செய்த தவறை உணர்ந்து கொண்டதாகவும் களத்தில் இருந்த மற்றொரு நடுவரிடம் ஆலோசித்த பின்பே ஆறு ரன்கள் வழங்கியதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்