உலக கோப்பையை வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தனது தலைமையிலான அணி வெற்றி பெற்ற முறை நியாமற்றது என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையை வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்
x
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து சூப்பர் ஓவரிலும் ஆட்டம் சமனில் முடிந்ததால், அதிக பவுண்டரி அடித்த அணி என்ற வகையில் இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.  இது குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் அளித்த ஒரு பேட்டியில், இரு அணிகளும் எவ்வித வித்தியாசமும் இன்றி  நெருக்கமாக ஆடிய நிலையில், ஐசிசி விதிகள்படி  தங்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது நியாயமானது இல்லை என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்