"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளம்" - மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் நம்பிக்கை

ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளமாக உள்ளதாக மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் கூறியுள்ளார்.
x
ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளமாக உள்ளதாக மதுரை அணி வீர‌ர் அருண் கார்த்திக் கூறியுள்ளார். மதுரையில், உள்ள தனியார் விடுதி ஒன்றில் டி.என்.பி.எல் கிரிக்கெட் வீர‌ர்கள் தேர்வு மற்றும், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், மதுரை அணியில் விளையாட இருக்கும், அருண் கார்த்திக் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 3 ஆண்டுகளை போலவே இந்த ஆண்டு டி.என்.பி.எல் தொடர் சிறப்பாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்