இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து - 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஸ்மித் 85 ரன்களும் , அலெக்ஸ் கேரி 46 ரன்களும் எடுத்தனர். 224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி 32 புள்ளி 1 ஓவர்களிலேயே 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வரும் 14ஆம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
Next Story