விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன்...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு உலகின் முன்னிலை வீரர்களான ஜோகோவிச், ஃபெடரர் மற்றும் நடால் உள்ளிட்டோர் முன்னேறி உள்ளனர்.
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன்...
x
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு உலகின் முன்னிலை வீரர்களான ஜோகோவிச், ஃபெடரர் மற்றும் நடால் உள்ளிட்டோர் முன்னேறி உள்ளனர். அதே சமயம் கலப்பு இரட்டையரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செரினா, முர்ரே ஜோடி தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. 

உலகின் பழமையான கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார், ரஃபேல் நடால் விறுவிறுப்பான கட்டத்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெறும் இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின், காலிறுதி போட்டியில் உலகின் முன்னிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அமெரிக்காவின் சாம் குர்ரேவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஃபெடரர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

மற்றொரு காலிறுதி போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜப்பானின் நிஷிகோரியுடன் மோதினார். ஆரம்பத்தில் சறுக்கிய ஃபெடரர், பின்னர் சுதாரித்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் 4-6, 6-1, 6-4,6-4 என்ற செட் கணக்கில் நிஷிகோரியை, ஃபெடரர் வீழ்த்தினார். நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஃபெடரர் மற்றும் நடால் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். 

காலிறுதி போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச்

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்கொண்டார். ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், டேவிட் கோஃபினை எளிதாக வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார். 

கலப்பு இரட்டையர் பிரிவில் செரினா, முர்ரே அதிர்ச்சி தோல்வி

கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் பிரிட்டனின் ஆண்டி முர்ரே ஜோடி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ரசிகர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் களமிறங்கிய செரினா, முர்ரே ஜோடி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்