உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோத அதிக வாய்ப்பு

உலக கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி எந்த அணியுடன் மோத அதிக வாய்ப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோத அதிக வாய்ப்பு
x
இந்திய அணி தனது இறுதி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது, இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும். இதனிடையே ஆஸ்திரேலியா தனது இறுதி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோற்றால் இரண்டாம் இடம் பிடிக்கும். அதன்படி அரையிறுதியில் ஆஸ்திரேலியா  இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும். இந்திய அணி 4வது இடத்தில் உள்ள நியூசிலாந்தை சந்திக்கும். மாறாக இந்தியா இலங்கை அணியிடம் தோற்றால் , அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தையும் , இந்திய அணி இங்கிலாந்தையும் எதிர்கொள்ள நேரிடும்.

Next Story

மேலும் செய்திகள்