சங்ககாராவின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா செய்த சாதனைகள்.
x
போட்டியின் தொடக்கத்தில் ரோகித் சர்மா கொடுத்த கேட்சினை வங்கதேச அணி நழுவவிட்டது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பவுண்டரிகளும் சிக்ஸ்ர்களும் பறக்கவிட்ட ரோகித் சர்மா சதம் அடித்தார். இந்த போட்டியையும் சேர்த்து நடப்பு உலக கோப்பை தொடரில் நான்கு சதம் அடித்துள்ள ரோகித் சர்மா, ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இது மட்டுமின்றி ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த, இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.  2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் சங்ககாரா 4 சதங்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்