பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்
x
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முக்கிய ஒன்றான பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் இன்று பாரிஸ் நகரில் தொடங்குகிறது. களிமண் தரையில் நடத்தப்படும் பிரெஞ்ச் ஓபனில்  கில்லாடியாக திகழும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இந்த முறையும் பட்டம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.அவருக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிக்,ராஜர் பெடரர்,மரின் சிலிச்,ஜப்பானின் நிஷிகோரி கடும் சவால் அளிக்கவுள்ளனர்.ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் ஆட்டத்தில் 92-ம் நிலை வீரரான ஹூகோ டெலியனுடன் மோதுகிறார்.பிரஞ்ச் ஓபனில் 11 முறை சாம்பியன் பட்டம் நடால் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்