ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்

ஐ.பி.எல். தொடரின் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன
x
ஐ.பி.எல். தொடரின் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன

கெயிலை நம்பி களமிறங்கும் பஞ்சாப் அணி, கடந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய முனைப்பில் உள்ளது. பெங்களூரை வீழ்த்திய உத்வேகத்தில் உள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகிறது.

இரு அணிகளும், இதுவரை 22 முறை மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 10 போட்டியிலும், மும்பை 12 போட்டியிலும் வென்றுள்ளன. 

இரவு 8 மணிக்கு டெல்லி, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. 

டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரிஷப் பண்ட், மீண்டும் அணியை வெற்றி பாதைக்கு திருப்புவார் என ரசிகர்கள் நம்புகின்றனர். 

கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரஸில்,  ஹாட்ரிக் வெற்றியை அந்த அணிக்கு பெற்று தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 13 முறையும், டெல்லி 9 முறையும் வென்றுள்ளன. 


பஞ்சாப் Vs மும்பை : மாலை 4 மணி, மொஹாலி

கிறிஸ் கெயில்
போட்டி 114
ரன்கள் 4093
ஸ்ட்ரைக் ரேட் 151.03
சராசரி 41.34

ரோஹித் சர்மா
போட்டி 175
ரன்கள் 4555
ஸ்ட்ரைக் ரேட் 131.07


Next Story

மேலும் செய்திகள்