ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி நிதான ஆட்டம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது.
நாக்பூரில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலே ரோகித் சர்மா டக் ஆவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். தவான் 21 ரன்களிலும், அம்பத்தி ராயுடு 18 ரன்களிலும் வெளியேற. கேப்டன் கோலி அரைசதம் கடந்தார். அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் விஜய் சங்கர் 46 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சற்று முன்பு வரை இந்திய அணி 6விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.
Next Story