நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி படுதோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி : இந்திய அணி படுதோல்வி
x
வெலிங்டனில் நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  தொடக்கம் முதலே நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். செஃபர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். முன்ரோ, வில்லியம்சன் தலா 34 ரன்கள் எடுக்க, 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. 


220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. கேப்டன் ரோஹித் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தவான் 29 ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 4 ரன்களில் போல்ட் ஆனார். தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப, அதிகபட்சமாக தோனி மட்டும் 39 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 139 ரன்களில் சுருண்ட இந்திய அணி,  80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்