ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக வென்று ஜோகோவிச் சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை 7வது முறையாக வென்று ஜோகோவிச் சாதனை படைத்தார். மெல்போர்னில் நடைபெற்ற ஆடவ ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடாலுடன், ஜோகோவிச் மோதினார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜோகோவிச், 6 க்கு 3,6 க்கு 2,6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அதிக முறை வென்ற வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றார். ஒட்டுமொத்தமாக ஜோகோவிச் வெல்லும் 14வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும்.
Next Story