ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதி சுற்றுக்கு பெட்ரா கிவிட்டோவா தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை காலின்ஸை எதிர்கொண்ட அவர் 7க்கு6, 6க்கு0 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் இறுதிச் சுற்றுக்கு பெட்ரா கிவிட்டோவா தகுதி பெற்றுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு, மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த கிவிட்டோவா பின்னர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story