கால்பந்து வீரருடன் சென்ற விமானம் மாயம் - விமானத்தை தேடும் பணி தீவிரம்

அர்ஜெண்டினா கால்பந்து வீரர் சாலா விமான விபத்தில் சிக்கியதால் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கால்பந்து வீரருடன் சென்ற விமானம் மாயம் - விமானத்தை தேடும் பணி தீவிரம்
x
பிரான்ஸ் உள்ளூர் கால்பந்து அணியில் விளையாடி கொண்டிருந்த அவர், இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் கார்டிஃப் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகினார். இதனால் பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக விளையாட சொகுசு விமானம் மூலம் பிரான்சிலிருந்து , இங்கிலாந்து சென்ற போது, நடுவானில் விமானம் மாயமானது. இதனையடுத்து கால்பந்து வீரர் மற்றும் விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விபத்து நிகழ்ந்து நீண்ட நேரமாகியதால், அவர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானம், விபத்தில் சிக்குவதற்கு முன், பயந்த குரலில் சாலா தன் நண்பர்களுக்கு VOICE MESSAGE அனுப்பியுள்ளார். தங்கள் அணிக்காக விளையாட வந்த வீரர் , களமிறங்குவதற்கு முன்பே உயிர் இழந்ததால் கார்டிஃப் அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ரசிகர்கள் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்