ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 3வது சுற்றுக்கு நடால் தகுதி
பதிவு : ஜனவரி 17, 2019, 09:46 AM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேத்தீவை எதிர்கொண்ட நடால், 6க்கு3,6க்கு2,6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி முன்னேற்றம்ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் தொடரில், நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி, 3 - வது சுற்றுக்கு முன்னேறினார். மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்வீடன் வீராங்கனை JOHANNA LARSON - ஐ எதிர்கொண்ட அவர் 6 க்கு 1 , 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

3வது சுற்றுக்கு ஷரபோவா முன்னேற்றம்ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றுக்கு ரஷ்யாவின் நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் சுவீடன் வீராங்கனை ரெபக்கா பீட்டர்சனை 6க்கு2,6க்கு1 என்ற செட் கணக்கில் ஷரபோவா வீழ்த்தினார்.

3வது சுற்றுக்கு ரோஜர் ஃபெடரர் தகுதிஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் பிரிட்டன் DAN EVANS ஐ எதிர்கொண்ட பெடரர், 7க்கு6,7க்கு6,6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

தென்னாப்பிரிக்க வீரர் ஆண்டர்சன் தோல்விஇதனிடையே 5ஆம் நிலை வீரரான தென்னாப்பிரிக்காவின் கேவின் ஆண்டர்சன் தோல்வியை தழுவினார். 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பிரான்சிஸை எதிர்கொண்ட ஆண்டர்சன் 4-6, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.

இரட்டையர் பிரிவு : முதல் சுற்றில் இந்திய ஜோடிகள் தோல்விஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போப்பண்ணா , ஷரண் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவியது. மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் ஸ்பெயினின் கார்சியா ஜோடியை எதிர்கொண்ட போப்பண்ணா, ஷரன் ஜோடி 1க்கு6, 6க்கு4,5க்கு7 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது. இதே போன்று பயேஸ் ஜோடி மற்றும் நெடுஞ்சேழியன் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியை தழுவியது. 

தொடர்புடைய செய்திகள்

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : இறுதி சுற்றுக்கு பெட்ரா கிவிட்டோவா தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்கு செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா முதல் முறையாக தகுதிப் பெற்றுள்ளார்.

24 views

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதிக்கு செரினா வில்லியம்ஸ் தகுதி

15 views

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : முதல் சுற்றில் நடால் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், நட்சத்திர வீரர் நடால் வெற்றி பெற்றார்.

34 views

பிற செய்திகள்

ஆஸி.க்கு எதிரான டி-20, ஒருநாள் தொடர் : காயம் காரணமாக ஹர்திக் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.

24 views

டி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்

டெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

75 views

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு

டெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

157 views

புல்வாமா தாக்குதல் எதிரொலி : பாக். கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் அகற்றம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.

17 views

ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு

ஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.

48 views

தலைசிறந்த விளையாட்டு வீர‌ராக ஜோகோவிச் தேர்வு

தலை சிறந்த வீராங்கணையாக சிமோன் பைல்ஸ் தேர்வு

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.