பதிலடி கொடுத்தது இந்தியா - பந்து வீச்சாளர்கள் அபாரம்
பதிவு : டிசம்பர் 08, 2018, 10:27 AM
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை ஊட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த நிலையில், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை ஊட்டியுள்ளனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் தங்களுக்கே உரித்தான பாணியில் 250 ரன்களுக்கு இந்திய  அணியை சுருட்டினர்.பெரும்பாலான நட்சத்திர வீர‌ர்கள் இன்றி களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியை, இந்த முறை அதன் சொந்தமண்ணிலே வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இந்திய அணியின் பேட்டிங் ஏமாற்றம் அளித்த‌து. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அந்த அணியின்  TRAVIS HEAD மட்டும் அரைசதம் கடக்க மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் வெளியேற்றப்பட்டனர். இதனால் அந்த அணி, 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. இந்திய அணியின் அஷ்வின் மற்றும் பும்ரா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர்.  இந்த வாய்ப்பை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது இரண்டாவது இன்னிங்சில் சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

615 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3302 views

பிற செய்திகள்

தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் நடை போட்டி

தமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 'நடை' போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

42 views

"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்

காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.

147 views

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : 4வது முறையாக சாய்னா நேவால் சாம்பியன்

தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.

47 views

ஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு

ஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு

44 views

இராணி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் : இதர இந்திய அணி ரன் குவிப்பு

இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.