ஆஸி. லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் : ஒரு ஓவரில் 26 ரன்கள் விளாசிய விஜய்

ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிழக வீரர் முரளி விஜய் சதம் விளாசினார்
ஆஸி. லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் : ஒரு ஓவரில் 26 ரன்கள் விளாசிய விஜய்
x
ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிழக வீரர் முரளி விஜய் சதம் விளாசினார். சிட்னியில் நடைபெற்ற 4 நாள் பயிற்சி ஆட்டத்தில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 358 ரன்களும், ஆஸ்திரேலிய லெவன் அணி 544 ரன்களும் குவித்தது. 196 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தமிழக வீரர் முரளி விஜய் 129 ரன்களும், கே.எல்.ராகுல் 62 ரன்களும் எடுத்தனர். முரளி விஜய் ஒரு ஓவரில் 26 ரன்கள் விளாசி அசத்தினார். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது. 

Next Story

மேலும் செய்திகள்