புயலில் விளையாடும் சாகச வீரர்கள்: ஆகாயத்தில் அலைச்சறுக்கும் வினோத போட்டி

புயல் காலத்தில் ஆகாயத்தில் அலைச்சறுக்கும் வினோத விளையாட்டுக்கு பெயர் தான் SKY SURFING.
புயலில் விளையாடும் சாகச வீரர்கள்: ஆகாயத்தில் அலைச்சறுக்கும் வினோத போட்டி
x
* கடல் அலையில் அலைச்சறுக்கி சாகத்தில் ஈடுபடும் வீரர்களை பார்த்திருப்போம்.. ஆனால் ஆகாயத்தில் சறுக்கி சாகசத்தில் ஈடுபடுபவர்களை பார்த்திருப்போமா..?? அந்த சாகச விளையாட்டுக்கு பெயர் தான் SKY SURFING.. 

* ஆகாயத்தில் பறக்கும் விமானத்திலிருந்து வீரர்கள் SURFING BOARD உடன் குதித்து, சாகசத்தில் ஈடுபடுவார்கள். சிறிது நேரம் ஆகாயத்தில் SURFING செய்யும் வீரர்கள், இறுதிக் கட்டத்தில் பாராசூட் மூலம் தரையிறங்குவார்கள்..

* உயிருக்கு ஆபத்தான SKY SURFING விளையாட்டை புயல் காலத்தில் வீரர்கள் சிலர் விளையாடவார்கள்.. கருமேகங்களுக்கு இடையே வீரர்கள் குதிக்கும் போது, காற்றின் வேகம் வீரர்களை புரட்டிப் போடும், பற்றாதகுறைக்கு, மின்னல்களும் வீரர்களை பதற வைக்கும். 

* இத்தனை சவால்களையும் மீறி வீரர்கள் SKY SURFING சாகசத்தை நிறைவு செய்வார்கள். குதிக்கும் போது, லாவகமாக, SURFING BOARD ல் ஏறி, ஆகாயத்தில் சறுக்குவது மிகவும் கடினமான காரியம். இதில் கவனம் செலுத்திக் கொண்டே பிறகு, பாராசூட்டை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். 

* SKY SURFING விளையாட்டை 1986ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த  DOMINIC மற்றும் ORON ஆகிய SKY DRIVERS கண்டுபிடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்