நெருங்கி வந்த பெண் தொகுப்பாளினி : எச்சரித்துவிட்டு அறையை விட்டு வெளியேறிய டிராவிட்

மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீர‌ர் ராகுல் டிராவிட்டின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நெருங்கி வந்த பெண் தொகுப்பாளினி : எச்சரித்துவிட்டு அறையை விட்டு வெளியேறிய டிராவிட்
x
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக டிராவிட் ஜோலித்து கொண்டிருந்த காலத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். பேட்டி முடிந்த‌தும் அந்த அறையில் யாரும் இல்லாத‌ நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி, டிராவிட்டை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறி நெருங்கி வந்துள்ளார். அதிர்ச்சியடைந்த டிராவிட், கடுமையாக எச்சரித்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேற முயன்றுள்ளார். அதன் பின்னர் தான், அவை அனைத்தும் விளையாட்டுக்காக எடுக்கப்பட்ட காட்சிகள் என்பது தெரிய வந்தது. தற்போது மீ டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்க, இப்படியும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதைச் சொல்ல அந்த தொகுப்பாளினியே அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்