இந்தியா - மே.இ.தீவுகள் கடைசி டெஸ்ட் : இந்தியா வெற்றி தொடரையும் கைப்பற்றியது

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - மே.இ.தீவுகள் கடைசி டெஸ்ட் : இந்தியா வெற்றி தொடரையும் கைப்பற்றியது
x
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 311 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 367 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. 56 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கு இந்திய தீவுகள் 
அணி 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 10 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

Next Story

மேலும் செய்திகள்