அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி : செரீனாவை வீழ்த்தினார் நவோமி ஓசாகா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி : செரீனாவை வீழ்த்தினார் நவோமி ஓசாகா
x
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில், ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா மற்றும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் மோதினர். இதில், 20 வயதான ஒசாகா தொடக்கத்தில் இருந்தே போட்டியை தன்வசப்படுத்தினார்.  முதல் செட்டை 6க்கு 2 என்ற புள்ளி கணக்கில் ஒசாகா வென்றார். இதனைத் தொடர்ந்து ஆவேசமாக விளையாடிய செரீனா, 2வது செட்டை 5க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இருப்பினும், தொடர்ந்து உற்சாகத்துடன் ஆடிய ஒசாகா, மூன்றாவது செட்டை 6க்கு 4 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இதனிடையே அமெரிக்க ஓபன் வெற்றியை தொடர்ந்து, கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமை ஒசாகா பெற்றுள்ளார். இந்த வெற்றியை ஜப்பான் நாட்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்