டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் காஞ்சிபுரம் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி
x
திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற 22 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய காஞ்சிபுரம் அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்