நீச்சல் தெரியாவிட்டாலும் ஆழ்கடல் ரகசியங்களைக் கண்டு ரசிக்கலாம் - ஸ்கூபா டைவிங்...!

ஸ்கூபா டைவிங் என்பது கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்தில் வாழும் அரியவகை மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகளை சுற்றுலா பயணிகளை அழைத்துசென்று காட்டுவதாகும்.
நீச்சல் தெரியாவிட்டாலும் ஆழ்கடல் ரகசியங்களைக் கண்டு ரசிக்கலாம் - ஸ்கூபா டைவிங்...!
x
புதுச்சேரியில் பலநாட்டு மக்களையும் கவர்ந்திழுக்கும் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில், சர்வதேச நகரம், மணக்குள விநாயகர் ஆலயம், வில்லியனூர் மாதா ஆலயம், பேரடைஸ் பீச், சுண்ணாம்பாறு படகு குழாம் என அற்புதமானபல இடங்கள் உள்ளன.இப்போது புதிதாக ஸ்கூபா டைவிங் எனும் ஆழ்கடல் விளையாட்டு கடல் பொழுதுபோக்கு அறிமுகமாகி பலரையும் கவர்ந்திழுக்கிறது. 

புதுச்சேரி கடற்கரையை ஒட்டியுள்ள சோலை நகர்பகுதியில் அரவிந்த் என்பவர் தனது நிறுவனத்தின் மூலம் 'ஸ்கூபா டைவிங்' கற்றுக்கொடுத்து வருகிறார்.ஸ்கூபா டைவிங் என்பது கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்தில் வாழும் அரியவகை மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள், பவளப் பாறைகளை சுற்றுலா பயணிகளை அழைத்துசென்று காட்டுவதாகும்.

இந்த ஆழ்கடல்விளையாட்டில் பங்கேற்க நீச்சல் தெரிந்திருக்க வேண்டியஅவசியமில்லை. அதுபோல வயது வித்தியாசம் இல்லாமல் எந்தவயதினரும் பங்கேற்க முடியும். ஒரு நாளைக்கு 20 முதல் 25 பேர் வரை படகு மூலம் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆழ்கடலுக்கு பயிற்சியாளர் உதவியுடன் அழைத்து செல்லப்படுகின்றனர்.காலை 6 மணிக்கு கடலுக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் மதியம் 12 மணிக்கு கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.ஆழ்கடலின் ரம்மியமான பகுதிகளை கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இனிமையான அனுபவத்தை தரும் ஸ்கூபா டைவிங் புதுச்சேரி வரும் சுற்றுலாப்பயணிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்