உலக கோப்பை கால்பந்து தொடர் : இறுதி போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வெற்றி
உலக கோப்பை கால்பந்து தொடர் : இறுதி போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்
x
உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டிக்கு பிரான்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரான்ஸ் அணி பெல்ஜியத்தை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை.போட்டியின் 51ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் உம்டிடி கோல் அடிக்க பிரான்ஸ் அணி முன்னிலை பெற்றது. பதிலுக்கு பெல்ஜியம் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முடிவில் 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்