1950ஆம் ஆண்டில் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா

உலகக் கோப்பை கால்பந்து தொடர், இதுவரை 2377 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன, 1950ஆம் ஆண்டில் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா.
1950ஆம் ஆண்டில் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா
x
உலகத்தில அதிக மக்களால் பார்க்கக் கூடிய விளையாட்டு கால்பந்து ஆகும். அப்படிபட்ட இந்த விளையாட்டின் உலகக் கோப்பை போட்டி முதல் முறையாக 1930ஆம் ஆண்டு நடைபெற்றது. இதுவரை 20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றது. பிரேசில் அதிகபட்சமா 5 முறையும், இத்தாலியும், ஜெர்மனியும் 4 முறையும் சாமபியன் பட்டம் பெற்றுள்ளது.

அர்ஜென்டினா, உருகுவே தலா 2 முறையும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அதிகபட்சமாக 71 கோடியே 50 லட்சம் ரசிகர்கள் தொலைக்காட்சி மூலமாக கண்டு களித்துள்ளனர்.  இந்த சாதனையை இதுவரை எந்த விளையாட்டும் முறியடிக்கவில்லை.

உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 2ஆயிரத்து 377 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல் அடித்தவர் ஜெர்மனி வீரர் க்ளோஸ்.. இவர் 16 கோல் அடித்து உள்ளார்
கால்பந்து ஜாம்பவான் ஃபிளே(  PELE) உலகக் கோப்பையில் 12 கோல் அடித்து உள்ளார். இதுவரை 3 உலகக் கோப்பையில் விளையாடி உள்ள மெஸ்ஸி உலகக் கோப்பை தொடரில் 6 கோல் அடிச்சிருக்காரு. 

1950 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி தகுதி பெற்றது. போதிய பயிற்சி, நேரமின்மை, நிதி நிலைமை இல்லாததால் அந்த தொடரில் இந்தியா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்