இன்று உலக காகித பை தினம்... காகித பைகளை தயாரிக்கும் ஊட்டி மக்கள்

உலக காகித பை தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வரவேற்பை பெற்றுள்ள காகித பை பற்றி சிறப்பு தொகுப்பு..
x
உலக காகித பை தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வரவேற்பை பெற்றுள்ள காகித பை பற்றி சிறப்பு தொகுப்பு..

உலக காகித பை தினம்...

பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக காகித பைகளை பயன்படுத்துங்கள் என்பதை நினைவுகூரவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கடைப்பிடிக்கப்படும் தினம்..

நீலகிரியில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைப்பதால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற பிளாஸ்டிக்கை பயன்படுத்த தடை செய்து கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறது மாவட்ட நிர்வாகம்..

பிளாஸ்டிக் கழிவுகளை  மறுசுழற்சி முறையில் பயன்படுத்த உதகை, தீட்டுக்கல் பகுதியில் மறுசுழற்சி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மீதான கட்டுப்பாடுகள், உதகையில் காகித பைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகள் நல்ல பயனை தந்துள்ளதாகவும் இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


சிவதாஸ்-இயற்கை ஆர்வலர்

நெகிழி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக காகித கவர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்கும் மக்களிடத்திலும், கடைகளிலும் வரவேற்பும் கிடைப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்


விச்சு பாய் - வியாபாரி

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி மற்றும் பேப்பர் பைகளை பயன்படுத்தி வருவது, உலக காகித பை தினம் நீலகிரி மக்கள் விடுக்கும் விழிப்புணர்வு செய்தியாகவே பார்க்கப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்