குழந்தை உதயநிதி, "நீதி கேட்டு நெடும்பயணம்"... முதல்வரின் திருக்குவளை இல்ல நினைவுகள்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது தந்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்தை குடும்பத்துடன் சென்று பார்வையிட்டார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....
x
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனது தந்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்தை குடும்பத்துடன் சென்று பார்வையிட்டார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....

பதவியேற்பு விழாவின் போதே... முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி பதவி பிரமாணம் எடுத்து கொண்டவர்... முதலமைச்சர் ஸ்டாலின்...

தனது தாத்தாவையும் தந்தையையும் நினைவுகூர்ந்து அவர் பதவியேற்றது... அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்திருந்தது... 

 
இந்நிலையில், முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் நிறைவடையும் நிலையில்.... 
தனது தாத்தா முத்துவேல் மற்றும் தந்தை கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளைக்கு தனது குடும்பத்துடன் சென்றார், முதலமைச்சர் ஸ்டாலின்...

அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா மற்றும் மருமகன் சபரீசன் மற்றும் பேர குழந்தைகள் உடன் சென்றிருந்தனர்.

 
பின்னர், தனது தந்தை பிறந்த வீட்டிற்கு சென்ற முதலமைச்சர்.... தனது தாத்தா - பாட்டியான முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் மற்றும் முரசொலிமாறன் மற்றும் தந்தை கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களைக் கண்டு, தன் பழைய கால நினைவுகளை குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டார். 

 
குறிப்பாக, கருணாநிதியின் புகழ்பெற்ற வைரவேல் நடைபயணமான "நீதி கேட்டு நெடும்பயணத்தின்" போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், உதயநிதி ஸ்டாலின் குழந்தையாக இருந்த போது தான் கைகளில் தூக்கி வைத்திருந்த புகைப்படத்தையும் நீண்ட நேரம் கண்டு ரசித்தார்.

 
பின்னர் அங்கிருந்த குறிப்பேட்டில்...தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை போல்... தந்தையின் சொல்லை நினைவுகூர்ந்த அவர்... பதவி என்பது பொறுப்பு என்று தந்தை கருணாநிதி அடிக்கடி கூறுவதை மனதில் ஏற்று கொண்டு, முதல்வர் பதவியை பதவியாக கருதாமல் பொறுப்பாக கருதி தனது பயணம் தொடரும் என உறுதிமொழி எடுத்து கொண்டார்...  

Next Story

மேலும் செய்திகள்