எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடு என்ன ஆகும்..? அமித்ஷா அதிரடி

x

இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு பாஜகவால் அகற்றப்படாது என்றும், ராகுல் காந்தி பொய்களை பரப்பி வருகிறார் என்று, மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

vovt

உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மோடி இந்த நாட்டின் பிரதமரானபோது, ​​பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கௌரவிக்க பாடுபட்டார் என்றும், அவர் ஒவ்வொரு ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பணியை செய்ததாக கூறினார். பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால், இடஒதுக்கீட்டை பாஜக அகற்றும் என்று, ராகுல் காந்தி உண்மைக்கு மாறாக பேசி வருவதாக அமித்ஷா தெரிவித்தார். இரண்டு முறை ஆட்சி செய்த பாஜக, இட ஒதுக்கிடை அகற்றவில்லை என்றும், பிரதமர் மோடி இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர் என்றும் கூறினார். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு பாஜகவால் அகற்றப்படாது என்றும், அமித்ஷா உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்