6 பேர் விடுதலை விவகாரம்; அடுத்து என்ன? - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.உதகைக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்ற 6 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், 6 பேர் விடுதலை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, ஆ.ராசா எம்.பி., அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்